சுடச்சுட

    

    கோயில் பசுக்கள் சட்ட விரோதமாக விற்பனை: இந்து மக்கள் கட்சி புகார்

    By  கடலூர்,  |   Published on : 19th December 2017 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் பசுக்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
     இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா தலைமையில் கட்சியினர், கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க மாட்டுடன் வந்தனர்.
     இதனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
     திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தேர் பழுதடைந்து வருகிறது. எனவே, தேர் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு கொட்டகை அமைத்துத் தர வேண்டும்.
     கோயிலுக்குச் சொந்தமான விளை நிலங்கள், கடைகள், பயிர் செய்யப்படாத வெற்றிடங்கள், கோயில் நகைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் கோ சாலைக்கு பக்தர்கள் 50-க்கும் மேற்பட்ட பசுக்களை அளித்துள்ளனர். அதில் தற்போது 32 பசுக்கள் மட்டுமே உள்ளன.
     இதர 18 மாடுகள் விற்கப்பட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சட்ட விரோதமாக பசுக்களை விற்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai