தமிழ்நாடு விஸ்வகர்ம சங்கக் கூட்டம்
By சிதம்பரம், | Published on : 19th December 2017 09:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்கக் கூட்டம், சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆலோசகர்கள் எம்.கோவிந்தராஜ், கே.நடராஜன், ஏ.சந்திரசேகரன், ஆர்.சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் பி.முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்து, மத்திய அரசின் ஜவுளித் துறை மூலம் வழங்கப்படும் கைவினைக் கலைஞர்களுக்கான புதிய அடையாள அட்டைகளை, பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நகரப் பொருளாளர் எஸ்.ராஜ்குமார், இளைஞரணிச் செயலர் எஸ்.ரமேஷ், தொழிற்சங்கச் செயலர் ஆர்.ராமச்சந்திரன், எம்.பாலசுப்பிரமணியன், ஆர்.மாரியப்பன், எம்.சுரேஷ், ஆர்.தில்லைநடராஜன், ஜி.சாமிநாதன், ஆர்.கிருஷ்ணகுமார், கே.பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞரணி துணைச் செயலர் கே.பாலாஜி நன்றி கூறினார்.
கூட்டத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குறைகளைக் கண்டறிய மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான ஆணையத்திடம் விஸ்வகர்ம மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளிப்பது, சங்க உறுப்பினர்களுக்கு 2018-ஆம் ஆண்டு புதிய அடையாள அட்டை வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.