சுடச்சுட

    

    பண்ருட்டியில் பணியிலிருந்த நகராட்சி ஊழியரைத் தாக்க முயன்றதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
     பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமத் (54). இவர், பண்ருட்டி நகராட்சியில் குப்பை அள்ளும் மின் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தினசரி காய்கறி அங்காடிப் பகுதியில் குப்பைகளை சேகரிக்க ரியாஸ் அகமத் துப்புரவுப் பணியாளர்களுடன் மினி லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது, தரைக் கடையில் இருந்த தக்காளி மீது மினி லாரி ஏறியதாம். இதனால், ஆத்திரமடைந்த தரைக்கடைக்காரர்கள் சக்கரபாணி (49), சக்தி (45) ஆகியோர் ரியாஸ் அகமதை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் சக்கரபாணி, சக்தி ஆகியோரை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai