Enable Javscript for better performance
புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம், பண்ருட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு, வட்டச் செயலர் ஏ.லாரன்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கோகுல கிறிஸ்டீபன், வட்டத் தலைவர் என்.அர்ச்சுனன், பொருளாளர் கே.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை வழங்க வேண்டும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜனவரி 4-ஆம் தேதி பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai