சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 511 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். 
  பெறப்பட்ட மனுக்களை தீர ஆராய்ந்து, விதிமுறைகளுக்குள்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டுமென துறை அலுவலர்களை ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், பண்ருட்டி வட்டம், மருங்கூரைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் 
  மாற்றுத் திறனாளி மணிவேல் சிறப்பு சக்கர நாற்காலி கோரி மனு அளித்தார். இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினார்.
  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித் துணை ஆட்சியர்கள் கூஷ்ணாதேவி (ச.பா.தி), சேதுராமன் (முத்திரைத்தாள்), மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai