சுடச்சுட

    

    மணல் கடத்தலைத் தடுத்தவர்கள் மீது தாக்குதல்: வெள்ளாற்றில் பொதுமக்கள் போராட்டம்

    By  கடலூர்,  |   Published on : 19th December 2017 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செம்பேரி கிராமத்தில் மணல் கடத்தலை தடுத்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் வெள்ளாற்றில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     திட்டக்குடி அருகே உள்ள செம்பேரி கிராமத்தில் செல்லும் வெள்ளாற்றில் உரிய அனுமதியின்றி சிலர் மணல் அள்ளி வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் ஆற்றில் நடைபெற்ற மணல் திருட்டு தொடர்பாக தகவலறிந்த வருவாய்த் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாவட்டம், முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிலர் வருவாய்த் துறையினர் மற்றும் ஊர் மக்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
     இந்த நிலையில், மணல் திருட்டை தடுத்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்தும் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை வெள்ளாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai