சுடச்சுட

    

    மார்கழி அமாவாசை: தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்

    By சிதம்பரம்,  |   Published on : 19th December 2017 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் எல்லையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தில்லைக்காளியம்மன் கோயிலில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு தில்லைக்காளிக்கு மகாபிஷேகம், 200-ஆவது சிறப்பு அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
    அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் பூர்வஜென்ம சாப தோஷங்கள் தீரும் என நம்பப்படுகிறது. 
    மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லைக்காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
    பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை தரிசித்தனர். சிறப்புப் பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மற்றும் பக்தர்கள் செய்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai