சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு  

    By  கடலூர்,  |   Published on : 19th December 2017 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
     அந்தக் கட்சியின் கடலூர் மாவட்ட 22-ஆவது மாநாடு விருத்தாசலத்தில் 3 நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி நாள் நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி ஜி.கலியபெருமாள் கொடி ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.மாதவன் முன்மொழிந்தார். வரவேற்புக் குழுத் தலைவர் ஏ.சந்திரசேகரன் வரவேற்றார். மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் மாநாட்டில் பேசினார். வரவு-செலவு அறிக்கையை செயற்குழு உறுப்பினர் மு.மருதவாணன் சமர்பித்தார்.
     மாநாட்டை வாழ்த்தி மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநாட்டை நிறைவு செய்து மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். வட்டச் செயலர் என்.எஸ்.அசோகன் நன்றி கூறினார்.
     பிரதிநிதிகள் மாநாட்டின் நிறைவாக மாவட்டச் செயலராக டி.ஆறுமுகம் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர்களாக டி.ஆறுமுகம், மூசா, வி.உதயகுமார், கோ.மாதவன், எம்.மருதவாணன், பி.கருப்பையன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வி.சுப்புராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, என்.எஸ்.அசோகன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி ஆகியோரும், மாவட்டக் குழு உறுப்பினர்களாக 41 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
     பிரதிநிதிகள் மாநாடு நிறைவைத் தொடர்ந்து அரசு கலைக் கல்லூரியில் இருந்து பேரணி புறப்பட்டு, விருத்தாசலம் வானொலி திடலில் நிறைவுப் பெற்றது. அங்கு, மாநாட்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai