சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நடைபெற்ற வாகனத் தணிக்கையில், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 2,030 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
  அமாவாசை தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை) திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கை நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி, திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய 7 காவல் உள்கோட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
  இதில், தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்கியது தொடர்பாக அதிகபட்சமாக 1,193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மதுபோதையில் வாகனம் இயக்குதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் இயக்கியது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 2,030 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த தொடர் வாகனத் தணிக்கையானது வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai