சுடச்சுட

  

  வைத்தியநாத சுவாமி கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

  By  கடலூர்,  |   Published on : 19th December 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திட்டக்குடியில் அமைந்துள்ள அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயிலில், ஐயப்பன் சந்நிதியில் 15 -ஆவது ஆண்டாக திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
   இதையொட்டி, அசனாம்பிகை ஆலய ஐயப்பன் சந்நிதியில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், எலுமிச்சை உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. வேத விற்பன்னர்கள் ருத்ர ஏகாத சஜபஹோமம் செய்து இயற்கை சீற்றங்கள் தணியவும், உலகம் அமைதி வேண்டியும் சிறப்பு யாக பூஜை செய்தனர்.
   தொடர்ந்து சுமங்கலிகள் நல் வாழ்வு பெறவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் வேண்டி ஐயப்பனுக்கு திரிசது அர்ச்சனை செய்தனர். சந்நிதி வளாகத்தில் 18 படிகள் அமைக்கப்பட்டு அங்கு ஐயப்பன், விநாயகர், கருப்பன்னசாமிக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கன்னிபூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் ஐயப்பன் பாடல்களைப் பாடி கூட்டு வழிபாடு செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai