சுடச்சுட

  

  இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகக் கட்டடம்

  By  சிதம்பரம்,  |   Published on : 20th December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகக் கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.
   புவனகிரி வட்டத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சீயாப்பாடி, மஞ்சக்கொல்லை, வாண்டையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறவும், விவசாயிகள் சிட்டா-அடங்கல் பெறவும் வந்து செல்கின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் நிலப் பதிவேடு, அடங்கல் பதிவேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
   ஆனால், கிராம நிர்வாக அலுவலகக் கட்டடம் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. கட்டடத்தின் மேல் கூரையிலிருந்து அவ்வப்போது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. மழை பெய்யும் நாள்களில் கட்டடத்தில் நீர்க் கசிவு ஏற்பட்டு ஆவணங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் கட்டடத்தை ஆய்வு செய்து, புதிய கிராம நிர்வாக அலுவலகக் கட்டடம் கட்டித்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai