சுடச்சுட

  

  இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்ததே பிரதமரின் சாதனை: ஜி.ராமகிருஷ்ணன்

  By  கடலூர்,  |   Published on : 20th December 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramakrishnan

  இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்ததே பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
   அந்தக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு விருத்தா சலத்தில் திங்கள்கிழமை வரை 3 நாள்களாக நடைபெற்றது. வானொலித் திடலில் மாநாட்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் டி.ஆறு முகம் தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று கையில், மக்களவைத் தேர்த லுக்கு முன் விவசாயிகளின் தற்கொலையை தடுப்பேன், விவ சாய நெருக்கடியைப் போக் குவேன் என்று கூறிய மோடி, பிரதமரான பின்னர் எதையும் செய்யவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்தை சிதைத்ததே மோடியின் சாதனை. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எழுந்து நிற்க முயற்சித்த மக்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதனால், இந்தியா முழுவதும் மேலும் தொழில்கள் நலி வுற்றன. கல்விக் கடன் ரூ.900 கோடியை அரசே ஏற்கும் என்று அறிவித்த கேரள மார்க்சிஸ்ட் கட்சியை பாஜக எதிரியாகப் பார்கிறது.
   மணல் கொள்ளை தொட ர்பாக கைது செய்ய ப்பட்ட சேகர் ரெட்டியின் டைரிக் குறிப்புகள் அண்மையில் வெளியானது. அதில் யாருக்கு எவ்வளவு கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் உள்ளது.
   இதைப் பற்றி எந்த அமைச்சரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தமிழக அதிமுகவின் அரசானது மத்திய பா.ஜ.க. வின் பினாமி அரசாக செயல்படுகிறது என்றார் அவர்.
   மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கோ.மாதவன், பி.தேன் மொழி, வரவேற்புக்குழு தலைவர் ஏ.சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். முன்னதாக, வட்டச் செயலர் என்.எஸ்.அசோகன் வரவேற்றார். பொருளாளர் சிவஞானம் நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai