சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே அரசூர் கிராமத்தில் உள்ள மணல் குவாரியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தார்.
     சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரை ஓரம் வெள்ளுர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றில் சி.அரசூர் கிராமத்தில் அரசு மணல் குவாரி உள்ளது. செவ்வாய்க்கிழமை வெள்ளுர் கிராமத்தில் 29 வயது மதிக்கத்தக்க இளைஞர், குவாரிக்கு மணல் ஏற்ற லாரிகள் செல்லும் பாதையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஆனந்தபிரபு (29) எனத் தெரியவந்தது. உடலில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது மணல் லாரி மோதி இறந்தாரா என்று சந்தேகம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் ஏஎஸ்பி நிஷா, ஆய்வாளர் செபஸ்டியன், தாசில்தார் க.ஜெயந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
     அப்போது, கிராம மக்கள் மணல் லாரி மோதி இளைஞர் இறந்ததாகக் கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். ஏ.எஸ்.பி. நிஷா அவர்களிடம் பேச்சுவார்த்தையை அடுத்து, இளைஞரின் சடலம் உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai