சுடச்சுட

  

  ஒக்கி புயல் பாதிப்பு: நிவாரணம் கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்

  By சிதம்பரம்,  |   Published on : 20th December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒக்கி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிதம்பரம் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கட்சியினர் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் பால.அறவாழி தலைமை வகித்தார். கங்கை அமரன் வரவேற்றார். வழக்குரைஞர்கள் பா.தாமரைச்செல்வன், சு.திருமார்பன் மற்றும் சு.திருமாறன், சு.பாவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 
  ஆர்ப்பாட்டத்தில், ஒக்கி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 
  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, தொகுதிச் செயலர் ஜெயக்குமார், நிர்வாகிகள் பி.குறிஞ்சிவளவன், ஐ.அந்தோணிசிங், செ.பேரறிவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செல்வ. செல்வமணி நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai