சுடச்சுட

  

  சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
   சனி பகவான் செவ்வாய்க்கிழமை விருச்சக ராசியிலிருந்து இடம் பெயர்ந்து தனுசு ராசிக்குச் சென்றார். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சனிப் பெயர்ச்சி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
   கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் சங்கல்பத்துடன் சனிப் பெயர்ச்சி சிறப்புப் பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, சனி பகவானுக்கும், நவக் கிரகங்களுக்கும் கலச பூஜை, வாசன திரவியங்களால் அபிஷேகம், மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்றன.
   இதேபோல, கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர் கோயில், திருவதிகை வீராட்டானேஸ்வரர் கோயில், திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர், விருத்தாசலம் விருத்தகீரிஸ்வரர் கோயில், திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாதசுவாமி கோயில், கடலூர் புதுக்குப்பம் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமங்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன. மேலும், சனி தோஷம் நீங்க கோயில்களில் சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டன.
   சிதம்பரம்: சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயில், அனந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் தரிசித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சனீஸ்வரருக்கு தனி சந்திதி உள்ளது. நவக் கிரக சந்நிதியும் உள்ளது. இந்த இரு சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்தனர்.
   இதேபோல, சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் அவதரித்த அனந்தீஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
   நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் தில்லை சீனு உள்ளிட்டோர் பங்கேற்று தரிசித்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai