Enable Javscript for better performance
டிச.22-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச.22) நடைபெறுகிறது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
     டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் விவசாயம் சார்ந்த பிரச்னைகளை பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அதற்காக, தங்களது பெயரை முன்னரே பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பேச வாய்ப்பு இல்லாதவர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக வழங்கலாம் என ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai