சுடச்சுட

  

  ஒக்கி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் முருகன்குடி பகுதிச் செயலர் அ.கனகசபை தலைமை வகித்தார். மாந்த நேயப் பேரவை பெ.ச.பஞ்சநாதன், தமிழ்ச் சங்கச் செயலர் க.சோழநம்பியார், பெண்ணாடம் அப்துல்கலாம் நற்பணி மன்றம் சிவதிருநாதன், மகளிர் ஆயம் மு.செந்தமிழ்ச்செல்வி, தமிழக மாணவர் முன்னணி தி.ஞானப்பிரகாரசம், தமிழக இளைஞர் முன்னணி நடுவண்குழு உறுப்பினர் சி.பிரகாசு, தமிழக உழவர் முன்னணி மு.இராமகிருட்டிணன், பெண்ணாடம் கிளைச் செயலர் கு.மாசிலாமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. முருகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டு அதனை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.
   காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும். காணாமல்போன மீனவர்கள் குறித்த முழுமையானக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தே.இளநிலா நன்றி கூறினார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai