Enable Javscript for better performance
தொழிலாளி நூதனப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூடுதல் பணி நாள் வழக்கக் கோரி, நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
     நெய்வேலி அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(53). இவர், என்எல்சி இந்தியா நிறுவன விரிவாக்கத்துக்காக வீடு, நிலம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாதம் ஒன்றுக்கு 10 நாள்களே பணி வழங்கப்படுகிறதாம்.
     இந்த நிலையில், ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை 2-ஆவது சுரங்க நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி, கூடுதல் வேலை நாள்கள் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, ராஜேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தி அவரை கீழே இறங்கச் செய்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai