சுடச்சுட

    

    மின் கம்பம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    By  கடலூர்,  |   Published on : 20th December 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் மின் கம்பம் முறிந்து விழுந்ததால் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     கடலூர் பாரதி சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கரும்பு சோகை பாரம் ஏற்றிய டிராக்டர் டிரெய்லர் சென்றது. அண்ணா மேம்பாலம் அருகே சென்றபோது, சாலையின் நடுத் தடுப்பில் உள்ள மின்கம்பத்தில் டிராக்டர் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததோடு, மறுபுறத்திலிருந்த மின்மாற்றியின் மீதும் விழுந்தது. இதனால் மின்மாற்றியில் தீப்பிடித்து தீப்பொறிகள் பறந்ததோடு, மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது. மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன.
     இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன. மின் தாக்குதல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பேருந்துகளில் பயணித்தவர்கள் அவற்றிலிருந்து அவசரமாக கீழே இறங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து காவல் துறையினர் பாரதி சாலையில் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர்.
     மின்சார வாரியத்தினர் சாலையின் குறுக்கே கிடந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி, மின்மாற்றியை சோதித்தனர். அதில், பெரிய அளவில் பழுது ஏற்படாததால் மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். எனினும், இருமுனை, மும்முனை மின்சாரம் வழங்கப்படாமல் ஒருமுனை மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டது.
     விபத்துக்குக் காரணமான டிராக்டர் ஓட்டுநரிடம் கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai