சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்ஐவி தொற்றுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு, மருத்துவக் கண்காணிப்பாளர் ஜி.ஹபீசா தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ரத்த வங்கி மருத்துவர் ஜி.சாய்லீலா முன்னிலை வகித்தார். எய்ட்ஸ் தடுப்பு மாவட்ட திட்ட மேலாளர் பு.தேவ்ஆனந்த், மாவட்ட மேற்பார்வையாளர் க.கதிரவன் ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.
   ஏ.ஆர்.டி. மைய மருத்துவர் ஸ்ரீதர், நேரு இளையோர் மைய கணக்காளர் டி.சக்கரவர்த்தி, 108 ஆம்புலன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், ஷீலா தொண்டு நிறுவனம் மூலம் எச்ஐவி தொற்றுள்ள 125 குழந்தைகளுக்கு சத்துமாவு, பருப்பு வகைகள், கொண்டக்கடலை, பேரீச்சம்பழம், கேழ்வரகுமாவு, ரவை, கோதுமை, தேன் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருள்கள், உதவித்தொகை வழங்கப்பட்டது.
   முன்னதாக, ஏ.ஆர்.டி. மைய ஆலோசகர் ஜி.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். அரசுத் தலைமை மருத்துவமனையின் சட்ட உதவி மைய ஆலோசகர் ஆர்.வெங்கடேசன் நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai