சுடச்சுட

    

    என்எல்சி இந்தியா சார்பில் நெய்வேலியில் நீட் தேர்வு பயிற்சி மையம் திறப்பு

    By  நெய்வேலி  |   Published on : 21st December 2017 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை அதன் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
     மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி பள்ளி மட்டுமின்றி, நெய்வேலியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் வசதிக்காக, நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையத்தை என்எல்சி கல்வித் துறையானது நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியுள்ளது.
     நெய்வேலி, தெலுங்கு சமிதி கல்வி அறக்கட்டளை சார்பில், ஏற்கெனவே நெய்வேலி வட்டம்-5, ஜவஹர் மேல்நிலைப் பள்ளியில் ஐஐடி மற்றும் நீட் தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியை வழங்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆல்டிடியூட் கிளாஸஸ் அமைப்பின் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
     பயிற்சி வகுப்புக்கான அனைத்து வசதிகளையும் என்எல்சி நிறுவனம் மேற்கொள்கிறது. இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி அளிக்கும் நிறுவனத்துக்கு மாதக் கட்டணமாக ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும்.
     வசதியற்ற மாணவர்களுக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் 50 சதவீத தொகையை மானியமாக வழங்கும்.
     ஜவஹர் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பங்கேற்று, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: இங்கு என்எல்சி ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றுவட்ட கிராம மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
     நிறுவனத் திட்டங்கள் நடைபெறும் இதரப் பகுதியிலும் இந்தச் சேவை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
     நிகழ்ச்சியில், என்எல்சி மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், ஜவஹர் கல்விக் கழகத் தலைவர் சையத் அப்துல் பதேக் காலித், பொருளாளர் வி.சந்திரசேகரன், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் கல்வித் துறை தலைமைப் பொதுமேலாளர் ஆர்.மோகன், கல்வித் துறை துணைப் பொது மேலாளர் ஐ.நெடுமாறன், நெய்வேலி, தெலுங்கு சமிதியின் புரவலர் துர்கம் வெங்கடேஸ்வரராவ், ஆல்டிடியூட் கிளாஸஸ் நிறுவன பொறுப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai