சுடச்சுட

  

  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாயில் கூட்டம்

  By  நெய்வேலி,  |   Published on : 21st December 2017 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, புதன்கிழமை ஆலை மற்றும் தொழிலகப் பகுதியில் வாயில் கூட்டம் நடத்தினர்.
   இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
   இந்த நிலையில், என்எல்சி இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த ஆயத்தப் பேரணி, பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நிரந்தரம், ஒப்பந்தத் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   கூட்ட முடிவில், சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க அலுவலகச் செயலர் அமிர்தலிங்கம் கூறுகையில், டிச.21-ஆம் தேதிக்குள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், 22-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். 30-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றத் தவறினால் ஜனவரி முதல் வாரத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
   இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் 2-ஆவது சுரங்கம் அருகே வாயில் கூட்டம் நடத்தினர். சிஐடியு ஒப்பந்தத் தொழிற்சங்க பொதுச் செயலர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அலுவலகச் செயலர் அமிர்தலிங்கம், தொமுச செயலர் கனக பழனிவேல், பொருளாளர் ஸ்டாலின், பி.டி.எஸ். சங்க பொதுச் செயலர் முருகவேல், தலைவர் ரவிச்சந்திரன், எல்.எல்.எப். சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சிவலிங்கம், அண்ணா தொழிற் சங்கம் சின்ன ரகுராமன், டிவிஎஸ் பொதுச் செயலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அனல்மின் நிலையம்-2, சுரங்கம்-1, அனல்மின் நிலையம்-1 ஆகிய பகுதிகளில் வாயில் கூட்டம் நடத்தினர். மேலும், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர். எல்.எல்.எப். சங்கச் செயலர் செüந்தர்ராஜன் நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai