சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக புதன்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
   இதனால், ஆயிரத்துக்கும் அதிகமான படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் மீன்பிடி தளங்களில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.
   ஒக்கி புயல் வீசிய நேரத்தில் கடல் தொடர்ந்து ஒரு வாரமாக சீற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் அப்போதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து, சில நாள்கள் மட்டுமே கடல் சாதாரண நிலையில் இருந்தது. அப்போது மட்டுமே மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டனர். தற்போது எந்தவிதமான புயல் சின்னமும் உருவாகாத நிலையிலும் கடந்த 5 நாள்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. சாதாரணமாக சுமார் அரை மீட்டர் உயரத்துக்கு எழும் கடல் அலை புதன்கிழமை சுமார் 1.80 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது. இதனால், மீனவர்கள் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai