சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் கிராம உதவியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
   இந்த வட்டத்துக்குள்பட்ட சின்னபண்டாரங்குப்பம், சொட்டவனம், தர்மநல்லூர், எடசித்தூர், கண்டியாங்குப்பம், கோ.ஆதனூர், கோட்டேரி, மு.பரூர், பெரியகாப்பாங்குளம், பழைய பட்டணம் ஆகிய 10 கிராமங்களுக்கு உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
   இதையடுத்து, விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களுக்கு ஜூலை மாதம் நேர்காணல் நடத்தப்பட்டு, பழைய பட்டணம் தவிர்த்து எஞ்சிய 9 கிராமங்களுக்கு 2 ஆண்கள், 7 பெண்கள் உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை இதுவரை வழங்கப்படாமல், பட்டியல் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பித்தவர்களும், தேர்வானவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
   இதுகுறித்து விருத்தாசலம் வட்டாட்சியர் எம்.பன்னீர்செல்வம் கூறியதாவது: பட்டியல் வெளியிடப்பட்டிருந்தாலும், அது நேர்மையானதாக இல்லை என தெரிய வந்ததால் யாருக்கும் பணி ஆணை வழங்கப்படவில்லை என்றார். விண்ணப்பதாரர் ஞானக்கண்ணன் என்பவர் கூறியதாவது:
   பட்டியல்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலரிடம் இடைத் தரகர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விஷயம் அம்பலமானதால் பிரச்னை ஏற்படும் எனக் கருதி, அந்த பட்டியல் நேர்மையானது இல்லை எனக் கூறி நிறுத்தியுள்ளனர். நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 90 நாள்களுக்குள் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தற்போது 6 மாதங்கள் கடந்துவிட்டதால், ஜூலை மாதம் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணி ஆணை வழங்க முடியாது. இதுதொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளோம் என்றார் அவர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai