Enable Javscript for better performance
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி, குறிஞ்சிப்பாடியில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     பண்ருட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பிரசார செயலர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர் மாயவன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
     குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
     மாநிலத் தலைவர் சந்தானகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில், 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள இணைய செலவினத் தொகையை வழங்க வேண்டும்.
     கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும்.
     உள்பிரிவு பட்டா வழங்க கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai