Enable Javscript for better performance
கெடிலம் ஆற்றில் தரைப் பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கெடிலம் ஆற்றில் தரைப் பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக் கோரிக்கை

    By  கடலூர்,  |   Published on : 21st December 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெடிலம் ஆற்றில் தரைப் பாலத்தின் உயரத்தை அதிகரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
     இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜெயமணி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் அளித்த மனு: தென்பெண்ணையாற்றில் மழைக் காலத்தில் செல்லும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தடுப்பணையை ஒரு அடி உயர்த்த வேண்டும். அதேபோல, கெடிலத்தில் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும். கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
     கடலூர் வட்டம், கோண்டூர் ஊராட்சி, வெளிச்செம்மண்டலம் குறிஞ்சி நகர் பகுதியில் நடுத்தர, அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் திறந்த நிலையில் இருப்பதால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, வாய்க்கால்களை மூட வேண்டும்.
     கடலூர் நகராட்சியுடன் இணைந்திருக்கும் கோண்டூர் ஊராட்சியானது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியாகும். இங்கிருந்து காவல் நிலையத்துக்கு 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, கோண்டூரில் புறக் காவல் நிலையம் அமைக்க வேண்டும். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் நியமிக்கப்படாததால் அவர்களுக்கான நலத் திட்டங்கள் வழங்குவது தாமதமாகிறது. எனவே, தனி வட்டாட்சியரை நியமிப்பதுடன், ஆதி திராவிடர் நலக் குழுவில் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு இடமளிக்கவும் வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai