சுடச்சுட

  

  நெய்வேலி சினேகா அமைப்பு சார்பில், சிறப்புக் குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா, லிக்னைட் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
   என்எல்சி இந்தியா நிறுவனம் சிறப்புக் குழந்தைகளுக்கான சிநேகா பள்ளியை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இங்கு 3 முதல் 25 வயது வரையுள்ள சுமார் 75 மாணவர்களுக்கு இலவச சிறப்புக் கல்வி வழங்கப்படுகிறது.
   இங்கு, படிக்கும், சிறப்புக் குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா லிக்னைட் அரங்கில் நடைபெற்றது. விழாவில் என்எல்சி இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தப் பள்ளிக்கு நிரந்தரமான வருவாயை உருவாக்க, என்எல்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் பணியை சினேகா பள்ளியிடம் வழங்கியிருப்பதை குறிப்பிட்டு பேசினார்.
   விழாவுக்கு, சிநேகா அமைப்பின் தலைவி யோகமாயா ஆச்சார்யா தலைமை வகித்தார். செயலர் என்.ஜோதிகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். செயற்குழு உறுப்பினர் எஸ்.மதிவாணன் வரவேற்றார். இயக்குநர்கள் சுபீர்தாஸ், ஆர்.விக்ரமன், நெய்வேலி மகளிர் மன்ற புரவலர் கஞ்சன் ராக்கேஷ் குமார் ஆகியோர் பேசினர். மருத்துவர் எஸ்.விஜயகுமாரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிநேகா அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர்கள் எஸ்.திருஞானசம்பந்த மூர்த்தி, செüந்தராஜன் ஆகியோர் கெüரவிக்கப்பட்டனர்.
   சிறப்புக் குழந்தைகளின் உரிமைகளை வலியுறுத்தும் உறுதிமொழியை, என்எல்சி நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன் தமிழிலும், என்எல்சி பொது மருத்துவமனை மருத்துவர் சி.தாரிணி மெüலி ஆங்கிலத்திலும் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விழா முடிவில் யோகமாயா ஆச்சார்யா, கஞ்சன் ராக்கேஷ் குமார் ஆகியோர் சினேகா பள்ளி ஆசிரியைகள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai