சுடச்சுட

    

    சிறுப்பாக்கம் வனப் பகுதியில் சூரியசக்தி மின் வேலி அமைக்க அரசுக்குப் பரிந்துரை

    By  கடலூர்,  |   Published on : 21st December 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுப்பாக்கம் வனப் பகுதியில் சூரிய சக்தி மின் வேலி அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்தது.
     கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள சிறுப்பாக்கம் பகுதி கிருஷ்ணாபுரம் காப்புக்காட்டையொட்டிய பகுதியாக உள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோளம், உளுந்து, மணிலா, வரகு, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தப் பயிர்களை குரங்குகள், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன. இதனால், வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
     இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் ஏ.செüந்தரராஜன் கூறியதாவது:
     காட்டுமயிலூர், நாங்கூர் வனச் சரகத்துக்குள்பட்ட சிறுப்பாக்கம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சூரியசக்தியில் செயல்படும் மின் வேலி அமைத்திட தீர்மானித்துள்ளோம். இதற்காக 30 கி.மீ. தொலைவுக்கு மின்வேலி அமைத்திட அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தப் பின்னர் இந்தப் பணி தொடங்கும் என்றார்.
     மேலும், கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் பகுதியில் அடிக்கடி முதலைகள் பிடிப்பட்டு வருகிறது. அவ்வாறு பிடிக்கப்படும் முதலைகள் வக்காரமாரி நீர்த் தேக்கத்தில் விடப்படுகின்றன.
     அங்கிருந்தும் சில முதலைகள் ஊருக்குள் புகுந்து விடுவதால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் வக்காரமாரியில் உள்ள முதலைகளை ஒகேனக்கல், சாத்தனூர், அமராவதி அணைப் பகுதிகளில் உள்ள முதலைப் பண்ணையில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
     இதுதொடர்பான கோப்பும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
     பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதியில் 2004-ஆம் ஆண்டு வரை 1,439 ஹெக்டேரில் இருந்த புன்னைவனக்காடு தற்போது 2,500 ஹெக்டேர் வரை விரிந்துள்ளது என்றார் அவர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai