தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவர் கைது
By கடலூர், | Published on : 21st December 2017 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சாராயம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சிதம்பரம் மதுவிலக்கு ஆய்வாளர் மணமல்லி தலைமையில் காவலர்கள் கடந்த 11-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக மொபெட்டில் 110 லிட்டர் சாராயம் கடத்திச் சென்றதாக புதுச்சேரி மாநிலம், பாகூர் அருகே உள்ள குருவிநத்தத்தைச் சேர்ந்த பா.புருஷோத்தமன் (42) என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு, நெல்லிகுப்பம் காவல் நிலையங்களில் சாராயம் கடத்தியது தொடர்பாக 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு,
குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கியதைத் தொடர்ந்து, புருஷோத்தமன் குண்டர் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு சிறையில் இருக்கும் வகையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.