சுடச்சுட

    

    புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை: பாஜக வலியுறுத்தல்

    By  கடலூர்,  |   Published on : 21st December 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்பட வேண்டுமென பாஜக வலியுறுத்தி உள்ளது.
     இதுகுறித்து அந்தக் கட்சியினர் கடலூர் மாவட்ட பொதுச் செயலர் மு.சக்திகணபதி தலைமையில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து அளித்த மனு: புவனகிரியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் கடல் உள்ளது. கடல் பெருக்கின்போது உப்புத் தண்ணீர் வெள்ளாற்றுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், ஆற்றுத் தண்ணீரின் தன்மை பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உப்பாக மாறி வருகிறது. இந்தப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
     இதனடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வரால் விதி எண் 110-ன் கீழ் தடுப்பணை கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. எனவே, இந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். மேலும், புவனகிரி 10-ஆவது வார்டில் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மதகு உடைந்த நிலையில் உள்ளது.
     இந்த மதகு முழுமையாக உடைந்தால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்படும். எனவே, உடனடியாக மதகை சரிசெய்ய வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
     மேலும், கடலூர் - சிதம்பரம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் புவனகிரி வழியாக வந்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுத்து தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதற்கு நன்றி தெரிவித்தனர்.
     கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜன், நெசவாளர் அணித் தலைவர் ஜனதாஜோதி, புவனகிரி நகரத் தலைவர் கோ.வெற்றிவேல், பொதுச் செயலர் ஜெ.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai