சுடச்சுட

    

    நெய்வேலி அருகே மணல் கடத்தியதாக டிராக்டர், மினி லாரியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். நெய்வேலி அருகே உள்ள சந்தைவெளிப்பேட்டை கிராமத்தில் ஓடையில் இருந்து மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியர் ஜான்சிராணி, மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் அந்தக் கிராமத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து, நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai