சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

    By  கடலூர்,  |   Published on : 21st December 2017 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கடலூர் கல்வி மாவட்ட அளவிலான (பாரா ஒலிம்பிக்) விளையாட்டுப் போட்டிகள் கடலூர் புனித வளனார் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 64 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மென் பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
     போட்டிகளை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தரமூர்த்தி தொடக்கி வைத்தார். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடல்கல்வி இயக்குநர்கள் அசோகன், ஜோதிப்பிரியா, நிஷா ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
     கடந்த திங்கள்கிழமை விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் விருத்தாசலத்தில் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கும் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பின்னர் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai