சுடச்சுட

  

  தமிழக அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் கடலூர் மாவட்டம் 44 பதக்கங்களைப் பெற்றது.
   தமிழ்நாடு மூத்தோர் தடகளப் போட்டிகள் நாகை மாவட்டம், சீர்காழியில் கடந்த 16, 17-ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில், கடலூர் மூத்தோர் தடகள அமைப்பினர் 18 பேர் அதன் செயலர் என்.பாலசுந்தரம், துணைத் தலைவர் கே.திருமலை ஆகியோர் தலைமையில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் விளையாடினர்.
   இதில், 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கே.பரமசிவம் 100மீ, 200மீ, 400மீ, 800மீ ஓட்டப் பந்தயங்களில் 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.
   இதேபோல ஓய்வுபெற்ற உடல்கல்வி ஆசிரியர் ஜி.புவனேஸ்வரி 70 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்று குண்டு எறிதல், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
   இந்தப் போட்டியில் கடலூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற வீரர்கள் 21 தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 44 பதக்கங்களைப் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு அமைப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai