சுடச்சுட

  

  தகராறு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 21 பேர் கடலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகி கையெழுத்திட்டனர்.
   நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் கடந்த 11-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக வி.சி.க. சீர்காழி தொகுதிச் செயலர் தானு.இனியன், மாநில துணைச் செயலர் ஸ்டாலின் உள்பட 21 பேரை சீர்காழி காவல் துறையினர் கைது செய்தனர்.
   இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி நாகப்பட்டினம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் 21 பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது.
   அதில், 21 பேரும் கடலூரில் தங்கியிருந்து குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி புதன்கிழமை 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டதாக கடலூர் மாவட்ட வி.சி.க. துணைச் செயலர் இல.திருமேனி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai