சுடச்சுட

    

    வீட்டில் காய்கறிச் செடிகள் வளர்க்க விதை விநியோகம்

    By  கடலூர்,  |   Published on : 21st December 2017 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீட்டில் காய்கறிச் செடிகள் வளர்க்க தோட்டக்கலைத் துறை சார்பில் விதைகள் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புறநகர் வீட்டு காய்கறி உற்பத்தி பெருக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக கடலூர் வட்டாரத்தில் காய்கறி விதைப் பொட்டலங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
     இதில், மிளகாய், கத்தரி, முருங்கை, அவரை, பாகல் ஆகிய 5 வகையான விதைப் பாக்கெட்டுகள் உள்ளன. அரசு மானியத் தொகை ரூ.8 போக விதை பாக்கெட் ரூ.12-க்கு வழங்கப்படுகிறது. ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை வழங்கி விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விதைகளை கடலூர் செம்மண்டலத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
     மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநரை 94430 42816 என்ற எண்ணிலும், உதவி தோட்டக்கலை அலுவலர்களை 89035 86449, 97870 84545, 97871 08747, 87549 49723 என்ற எண்களிலும் தொடர்புக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai