சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே மணல் குவாரியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, லாரி ஓட்டுநரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
   சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் சி.அரசூர் கிராமத்தில் அரசு மணல் குவாரி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபிரபு (29) என்பவர், குவாரிக்கு மணல் ஏற்ற லாரிகள் செல்லும் பாதையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இவர், மணல் குவாரிக்குச் சென்ற லாரி மோதியதில் இறந்ததாகக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சடலத்தைப் பெற மறுத்தனர்.
   இதையடுத்து, குமராட்சி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, மணல் குவாரியில் நிறுத்தப்பட்ட லாரி ஓட்டுநர்கள் 100-க்கும் மேற்பட்டோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில், கேரளம் மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுதாகர் (40) விபத்து ஏற்படுத்தியதாக ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்தார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai