சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் அங்கம்-35, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவத் துறை இணைந்து உலக எய்ட்ஸ் தின விழாவை கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தின.
     நிகழ்ச்சியில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ராஜ்குமார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.யு.சண்முகம், துணை முதல்வர் வி.முனியப்பன், சமூக மருத்துவத் துறைத் தலைவர் பி.கே.கோவிந்தராஜன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து அனைவரும் பேசினர்.
     உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ராஜ்குமார் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் டி.கே.செந்தில்முருகன் செய்தார். நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் தமிழ்மாறன், சமூக மருத்துவ நலத் துறை ஆசிரியர்கள், முதுநிலை மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai