சுடச்சுட

    

    என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

    By  நெய்வேலி,  |   Published on : 22nd December 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nlc

    கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், என்எல்சி இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த ஆயத்த பொதுக்கூட்டம் நெய்வேலியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் தொழிற்சங்கத் தலைவர் மாதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொமுச பொதுச் செயலர் கனக.பழனிவேல், அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலர் ரகுராமன், பிடிஎஸ் பொதுச் செயலர் முருகவேல், டிவிகே பொதுச் செயலர் திருநாவுக்கரசு, எல்எல்எப் பொதுச் செயலர் செüந்தரராஜன், சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், சிஐடியு ஒப்பந்தத் தொழிற்சங்க அலுவலகச் செயலர் டி.அமிர்தலிங்கம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டார். அதில், முன்னரே அறிவித்தவாறு வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது. டிச.30-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றத் தவறினால் ஜனவரி முதல் வாரத்தில் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    தொமுச பொருளாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai