சுடச்சுட

  

  கடலூரில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
   கடலூர் மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டு வெள்ளம் பாதித்ததைத் தொடர்ந்து, வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதிலும், மழைநீர் வடிகால்களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 5 ஆறுகளின் வடிகால் பகுதியாக உள்ள கடலூரில் நீர்வழித் தடங்களை கண்டறிந்து, அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
   கடந்த சில நாள்களாக பாரதி சாலையிலிருந்து கெடிலம் ஆறு வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமை தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதியுடன் கூடிய உணவகக் கட்டடத்தின் (ஹோட்டல்) ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு அதன் உரிமையாளர் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றினர்.
   இந்தப் பணியானது கெடிலம் ஆறு வரை தொடரும் என்றும், இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் தடையின்றி வடியும் எனவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai