சுடச்சுட

  

  கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சீர்காழி ரெளடி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
   கடலூர் மாவட்டம், சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் செ.பழனிச்சாமி (47). இவர், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அண்ணாமலை நகர் கூத்தங்கோயில் செல்லும் வழியில் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நாகை மாவட்டம், மாங்கனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர்அலி மகன் ஹர்ஷத் அலி (25) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில், ஹர்ஷத்அலி கூலிப்படையாக செயல்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
   இவர் மீது நாகை மாவட்டம், ஆணைகாரன்சத்திரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கிய உத்தரவின் படி ஹர்ஷத்அலி ஓராண்டுக்கு குண்டர் தடுப்பு காவலில் வைக்கும் வகையில் கடலூர் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai