Enable Javscript for better performance
தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.36 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.36 லட்சம்

    By  சிதம்பரம்,  |   Published on : 22nd December 2017 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில், ரூ.11.36 லட்சம் காணிக்கையாகக் கிடைத்தது.
     இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார், முத்துக்குமரன் மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 11 லட்சத்து 36 ஆயிரத்து 689 ரூபாய் கிடைத்தது. மேலும், தங்கம் 75 கிராம், வெள்ளி 101 கிராம், வெளிநாட்டு பணம் சிங்கப்பூர் டாலர்-2, மலேசியா ரிங்கட்-36, அமெரிக்க டாலர்-1 உள்ளிட்டவை இருந்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai