சுடச்சுட

    

    துப்புரவுப் பணியாளர் பிரச்னையில் உடன்பாடு: குப்பைக் கழிவுகள் அகற்றம்

    By    நெய்வேலி,  |   Published on : 22nd December 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துப்புரவுப் பணியாளர்கள் விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டதால், பண்ருட்டி காய்கறிக் கடைகள் பகுதியில் தேங்கியிருந்த குப்பைக் கழிவுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
     பண்ருட்டியில் ரத்தினம் பிள்ளை அங்காடி உள்ளது. இங்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 7 டன் அளவுக்கு காய்கறி, இறைச்சிக் கழிவுகள் சேகரமாகும். இவற்றை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இரவு நேரத்தில் அப்புறப்படுத்துவது வழக்கம்.
     கடந்த 17-ஆம் தேதி குப்பை அகற்றச் சென்ற லாரி தரைக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தக்காளி குவியல் மீது ஏறியது. இதனால், கடை உரிமையாளர் சக்கரபாணி, நகராட்சி லாரி ஓட்டுநர் ரியாஸ் அகமது ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடந்த சக்கரபாணி, அவரது மனைவி சக்தி ஆகியோர் லாரி ஓட்டுநர் ரியாஸ் அகமதுவை தாக்க முயற்சித்தனர். இது தொடர்பாக ரியாஸ் அகமது அளித்தப் புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் தம்பதியரை கைது செய்தனர்.
     இந்த நிலையில், அங்காடி பகுதியில் துப்புரப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனக்கூறி நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கடந்த 4 நாள்களாக காய்கறி, இறைச்சிக் கழிவுகளை அகற்றவில்லை. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதையடுத்து, காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.சிவா, அங்காடி வியாபாரிகளால் எந்த இடையூறும் ஏற்படாது எனவும், துப்புரவுப் பணியாளர்களுக்கு பணி நேரத்தில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) வெங்கடாஜலத்திடம் கடிதம் அளித்தார்.
     இதையடுத்து, வியாழக்கிழமை மதியம் அங்காடிப் பகுதியில் குப்பை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai