சுடச்சுட

  

  விவசாயிகள் அரசு மானியத்தில் மீன் பண்ணை அமைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   தமிழக அரசானது, விவசாயிகள் பல்நோக்கு பண்ணைக் குட்டைகள் அமைத்து அதில் மீன்களை வளர்க்க ஊக்குவித்து வருகிறது. அவ்வாறு ஒரு பண்ணைக் குட்டை அமைக்கத் தேவைப்படும் மொத்தச் செலவினத்தில் 50 சதவீதம், அதாவது ரூ.64,250 வரை மானியமாக வழங்கப்படுகிறது.
   அதன்படி, பண்ணைக் குளத்தில் மரபியல் மேம்படுத்தப்பட்ட லேப்பியா மீன்களை வளர்க்கலாம்.
   இதற்காக, 5,000 எண்ணிக்கையில் மீன் குஞ்சுகள் வழங்கப்படும். அனைத்துத் தரப்பினரும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம். ஒரு மீன் பண்ணைக்குட்டை அமைத்திட 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
   மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பரங்கிப்பேட்டையில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai