சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் 9,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
     இந்த மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்துக்கு வாகனத் தணிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
     இதன்படி கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 காவல் உள்கோட்டங்களுக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வாகனத் தணிக்கையில் மொத்தம் 9,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
     இதில், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4,451 வழக்குகளும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2,283 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 122 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 183 பேர் மீதும், இதர மோட்டார் வாகன வழக்குகளாக 1,863 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகன விதிகளை மீறியதாக சுமார் ரூ.9 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai