சுடச்சுட

    

    2ஜி தீர்ப்புக்கு வரவேற்பு: திமுகவினர் கொண்டாட்டம்

    By  கடலூர்,  |   Published on : 22nd December 2017 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2 ஜி வழக்கில் கனிமொழி, ராஜா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று, கடலூர் மாவட்டத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடினர்.
     கடலூரில் நகரச் செயலர் கே.எஸ்.ராஜா தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பின்னர், தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்று இனிப்பு வழங்கினர்.
     விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தலைமை தீர்மானக்குழு செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான குழந்தைதமிழரசன் தலைமையில் கடைவீதி, உழவர்சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு முன்னிலை வகித்தனர்.
     பண்ருட்டி: பண்ருட்டியில் திமுகவினர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஏ.சிவா தலைமையில், மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர், சோழன், தஷ்ணா உள்ளிட்டோர் நான்கு முனைச் சந்திப்பில் இருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
     நெய்வேலி: நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே சொரத்தூர் ஊராட்சிச் செயலர் சபா. பாலமுருகன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, நகர பொறுப்பாளர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். நெய்வேலி நகரியத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே நகர திமுக பொறுப்பாளர் பக்கிரிசாமி தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai