சுடச்சுட

  

  தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சிக் கல்வி மேற்கொண்டு வருபவர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களது கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. அதன்படி, 2017}18 ஆம் ஆண்டிற்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலுமிருந்து 67 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஆராய்ச்சிகள் குறித்து வெளியிட்டனர்.
  இதில், சிறந்த 33 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் விலங்கியல் துறையில் முதுநிலை அறிவியல் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவர் ஏ.மகாலிங்கமும் ஒருவர். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 9 கல்லூரிகளிலிருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, இக்கல்லூரியிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தேர்வாகியுள்ளார். தேர்வான மாணவரை கல்லூரியின் முதல்வர் ப.குமரன் பாராட்டி தேர்வு பெற்றதற்கான சான்றிதழை வியாழக்கிழமை வழங்கினார். அப்போது விலங்கியல் துறைத்தலைவர் இரா.கண்ணன், உதவிப்பேராசிரியர் இரா.ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai