சுடச்சுட

  

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் வி.டி.குணசேகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்தில், மாவட்டச் செயலர் எம்.சேகர் விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில், பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிர்வாகம் தொடர்ந்து சட்ட விதிகளை மீறி வருகிறது. இதனை எதிர்த்துப் போராடுவோர் மீது பொய்ப் புகார்களை நிர்வாகம் அளித்து வருவதோடு, அதற்கு பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் உடந்தையாக செயல்படுவதை கண்டிப்பது. இந்த வழக்கு விசாரணையை வேறு ஒரு காவல் ஆய்வாளருக்கு மாற்றி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப.ஜெகரட்சகன், சக்திவேலு, கலியபெருமாள், ஏ.ராஜ், ராமலிங்கம், ஜி.மணிவண்ணன், ஏ.கே.சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai