சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, வெள்ளிக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்த நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
  இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அனைத்துச் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. சுமார் 70 சதவீதம் பேர் பணிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. நகர நிர்வாகத் துறை ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டும் வழக்கம்போல பணிக்கு வந்தனர்.
  பணியில் பாதிப்பில்லை: ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து என்எல்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
  பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலக்கரி வெட்டி எடுத்தல், மின் உற்பத்தியில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai