Enable Javscript for better performance
திருமண மண்டப மேலாளர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே திருமண மண்டப மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை பிரதான சாலையில் வசித்து வந்தவர் மருள்நீக்கியார் (44). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ராதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். வியாழக்கிழமை இரவு மண்டபத்துக்குச் சென்றவர் வெள்ளிக்கிழமை நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. மண்டபத்துக்குச் சென்ற ராதா, அங்குள்ள மரத்தில் தூக்கில் மருள்நீக்கியார் இறந்த நிலையில் இருந்ததைக் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    இவர், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai