சுடச்சுட

    

    நிலுவைத் தொகை வழங்காததால் விரக்தி: கரும்பு கொள்முதலை தடுத்த விவசாயிகள்

    By DIN  |   Published on : 23rd December 2017 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படாத நிலையில், பெண்ணாடம் அருகே தொளார் கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் மேற்கொண்ட கரும்பு கொள்முதலை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
    கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையும், 4 தனியார் சர்க்கரை ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மாநில அரசின் ஆதரவு விலையை கடந்த சில ஆண்டுகளாக வழங்காமல், ரூ.371 கோடி வரை பாக்கி வைத்துள்ளன. எனவே, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
    இந்த நிலையில், சர்க்கரை ஆலைகள் நிகழாண்டுக்கான கரும்பு அரைவையை தொடங்கியுள்ளன. ஆலை நிர்வாகத்தினர் தங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக வயல்களுக்கே நேடியாகச் சென்று அறுவடைப் பணியை மேற்கொள்கின்றன.
    அதன்படி, கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தில் தனியார் வயலில் அறுவடை மேற்கொள்ள வந்த தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்களை, மற்ற விவசாயிகள் கரும்பு கொள்முதல் செய்யவிடாமல் தடுத்தனர். நிலுவைத் தொகையை வழங்கிய பிறகே கரும்பு அறுவடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, ஆலை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    இதனால், ஆலை ஊழியர்கள் அறுவடைப் பணியை பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai